Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போக்குவரத்துக்கு இடையூறு…. அரியலூரில் கடைகளின் பதாகைகள் அகற்றும் பணி தீவிரம்….

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தனியார் நிறுவனங்களின் பெயர் பதாகைகளை, அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்

போக்குவரத்திற்கு இடையூறாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையிலும், தனியார் நிறுவனங்களால் வைக்கப்பட்டுள்ள பெயர் பதாகைகளை நகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் வருங்காலங்களில் இது போன்ற போக்குவரத்திற்கு இடையூறாக பெயர் பதாகைகள் வைக்க கூடாது எனவும் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்களிடம் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென விளம்பர பதாகைகள் எடுப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தனியார் நிறுவன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!