Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாக்குச்சாவடியில் தேமுதிக வேட்பாளர் வாக்குவாதம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது, அவர் தேமுதிக கட்சி துண்டு, வேட்டியுடன் வந்ததால் அவரை வாக்குச்சாவடிக்குள் நுழைய தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்திவிட்டார். இதனால், தேர்தல் அதிகாரியிடன் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் சிறிது வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், கட்சி அடையாளங்களுடன் வாக்குச்சாவடிக்குள் வரக்கூடாது என்று தேர்தல் அதிகாரி அறிவுரை கூறினார். இதனை தொடர்ந்து  அவர் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் கட்சி அடையாளத்தை வெளிப்படுத்தும் கட்சி துண்டு, வேட்டியை மாற்றிவிட்டு பேண்ட், சட்டை அணிந்து வந்து, அவர்  வாக்களித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!