திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ தி.மு.கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து மாநில இளஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் முன்னாள் கொறடா மனோகர், ரத்தினவேல், பூபதி, மலைக்கோட்டை ஐயப்பன் உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூரில் அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்க அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை மற்றும் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான
வரகூர். அருணாசலம் ஆகியோர் தலைமை தாங்கினர். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா, சந்திரகாசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பூவை. செழியன் ,தமிழ்செல்வன் மற்றும் நகர கழக செயலாளர் ராஜ பூபதி, ஒன்றிய கழக செயலாளர், கட்சி நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரியலூரில் எம்ஜிஆர் சிலை அருகில் திமுக அரசை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
நாகை அபிராமி சன்னதி திடலில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் தலைமைதாங்கினார். இதில் ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் தலைமையில், வைரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், ராமையா, அப்துல் அலி, புதுகை நகர செயலாளர் பாஸ்கர், சேட்டு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.