Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் 1,600 கோடி ரூபாய் நிதிகளை பெற்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர் பேச்சு.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் முதல் முறை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக வேட்பாளராக போட்டியிடும் இளங்கோ காலை மாலை என நாள்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

க்ஷ
இன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்திபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நடுப்பாளையம், குப்பம், அய்யம்பாளையம், சக்கர பாளையம் தெரு, கிறிஸ்துவ தெரு,

வேலாயுதம்பாளையம் வடக்கு ஏரியா தெரு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று திமுக அரசின் 5 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட சாதனை திட்டங்கள் குறித்தும், அரவக்குறிச்சி பகுதியில் 1,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் ஒவ்வொரு பகுதிகளிலும்

செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி அடுத்து ஆட்சி அமைந்த உடன் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

error: Content is protected !!