தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் களம் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை

சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் சிவாயம் ஊராட்சி பகுதிகளில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட இரும்பூதிப்பட்டி, வேப்பங்குடி, ஈச்சம்பட்டி, குப்பாச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர் சாதாரணமானவர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை தந்து அழகு பார்ப்பது திமுக கட்சி என்றும், 5 ஆண்டு காலம் திமுக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி உணவு திட்டம், தாயுமானவர் திட்டம் என அரசின் சாதனைகளை நம்பி என்னை போன்ற சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார். மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாய் கிடைத்திடவும் விவசாயிகளுக்கு மின் மீட்டர் பொருத்தப்படாத இலவச மின் மோட்டார்கள் பெற்றிட மீண்டும் திமுக அரசு அமைந்திட உதயசூரன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.
திமுக மாநில மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

