Skip to content
Home » திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு…20ம் தேதி கூடுகிறது

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு…20ம் தேதி கூடுகிறது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 20.5.2023 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும். அதுபோது உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!