திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதானதை முதலமைச்சர் விஜய் இழிவுபடுத்தி பேசியதாக கூறி, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு கண்டனங்களை எழுப்பினர்.
