Skip to content
Home » முதல்வர் பிறந்த நாள்……3 நாட்கள் பொதுக்கூட்டங்கள்…. திமுக அறிவிப்பு

முதல்வர் பிறந்த நாள்……3 நாட்கள் பொதுக்கூட்டங்கள்…. திமுக அறிவிப்பு

திமுக பொதுச்செயலாளர் துரைமுரகன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:

முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23.2.2024 அன்று காணொலி காட்சி வாயிலாக “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில், “மார்ச் 1-ம் தேதியன்று நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கழகத் தலைவர் 71-ம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான நம் தலைவர், கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்த பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார்.

தலைவரின் பிறந்தநாளை நாம் அனைவரும் சீரிய வகையில் கொண்டாடும் விதமாக திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக்கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் தலைமைக் கழக அறிவிப்பின்படி நடத்திடுவது என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, வருகிற மார்ச் 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் மாநகரம் மற்றும் நகரங்களில் அறிவிக்கப் பட்டுள்ள பேச்சாளர்களைக் கொண்டு, “எல்லோருக்கும் எல்லாம்” “திராவிட மாடல் நாயகர் கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள்!” நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!