நீட் விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் ரத்து, மாணவர்களை காப்பாற்றுங்கள் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தன. ஆனால், தற்போது, காங்கிரஸ், திமுக தனித்தனியாக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
