Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக ஆட்சி தொடரும்.. கர்நாடக துணை முதல்வர்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாகவும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். பொன்னேரியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர திமுக அரசு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என பிரச்சாரம் செய்துள்ளார் . “தமிழ்நாட்டின் எதிர்காலம் மக்களின் கையில் உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர திமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் இந்தியா கூட்டணியின் கையில் உள்ளது. திமுக ஆட்சி தொடரும் “திமுக கூட்டணி சார்பில் ரூ.8,000 கூப்பன் உட்பட பல வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளோம். தேர்தலில் 3ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சி தொடரும்” என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!