Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….காணொலி மூலம் நாளை நடக்கிறது

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் 22ம் தேதி நாளை (வெள்ளிக்கிழமை), காலை 11.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் இதுவரை செய்துள்ள  தேர்தல் முன்னேற்பாடு பணிகள்,  இனி செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!