Skip to content
Home » எப்போதும் தமிழ் ஆட்சி காலம் தான்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு ….

எப்போதும் தமிழ் ஆட்சி காலம் தான்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு ….

  • by Senthil

சென்னை இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது…. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. திமுகவின் ஆட்சி காலம் எப்போதும் தமிழ் ஆட்சி காலம்தான். தமிழ் செம்மொழி மாநாடு திமுக ஆட்சியில்தான் நடத்தப்பட்டது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தது கலைஞர்தான். மொழி என்பது ஒரு இனத்தினுடைய உயிர், இலக்கியம் என்பது ஒரு இனத்தினுடைய இதயம், மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம்தான் நமது தமிழ் இனம். மொழியை காக்க உயிரை கொடுத்த இனம் தமிழ் இனம். மொழியை அறிவாலும், உணர்வாலும் வளர்க்க வேண்டும். இலக்கிய திருவிழா, தமிழ் மாநாடு போன்று நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழ் வளர்ச்சிக்காக திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எத்தனையோ திட்டங்களை கொண்டுவந்தாலும், சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரியில் வள்ளுவர் சிலையும் காலத்தால் அழியாத கம்பீரமான சின்னங்களாக இன்று வரை இருக்கின்றன. மொழியை பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது, அறிவால், உணர்வால் வளர்த்தாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டை முன்னிட்டு அவர் எழுதிய கட்டுரைகள், தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை இலக்கிய திருவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திசைதோறும் திராவிடம் பிரிவில் 12 புத்தகங்களும், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத்திட்டம் பிரிவில் 29 புத்தகங்களும், இளந்தளிர் இலக்கிய திட்டம் பிரிவில் 36 புத்தகங்களும், சங்க இலக்கியங்கள், பத்துப்பாட்டு 10 புத்தகங்கள் உள்பட 100 நூல்கள் வெளியிடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!