Skip to content
Home » திமுக இளைஞரணி மாநாடு….. முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம் பயணம்

திமுக இளைஞரணி மாநாடு….. முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம் பயணம்

  • by Senthil

திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தில் நாளை நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் மாநாடு துவங்குகிறது. இந்த நிலையில் ,சேலம் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சேலம் செல்கின்றனர். மாலை 5 மணிக்கு, சேலம் விமான நிலையம் வரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!