Skip to content

திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில்  இன்று நடந்தது.

மாநகர இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர துணை அமைப்பாளர் பர்மா ரூபன், மாவட்ட துணை அமைப்பாளர் சூர்யா ஆகியோர் வரவேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் திமுக  முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்..

இதில் திருச்சி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி,பேரூர் அமைப்பாளர்கள்
,துணை  அமைப்பாளர்கள் இளைஞரணி புதிய நிர்வாகிகள் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பது  உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

இந்த அறிமுக கூட்டத்தில் மாநகர மேயர் அன்பழகன்,
தலைமை செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா,
தலைமை கழக பேச்சாளர் சமூக வலைதள பயிற்சியாளர் இளமாறன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!