அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகன் மைக்கேல் போலோஸ், மாநில அரசின் விருந்தினராக இன்று கேரளாவிற்கு வருகை தந்தார். தனி விமானம் மூலம் வந்தடைந்த அவர், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசனைச் சந்தித்துப் பேசினார். அவருடன் இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் மற்றும் சென்னையைச் சேர்ந்த உயர்மட்டத் தூதரக அதிகாரியும் உடன் வந்தனர். போலோஸ் கொச்சியில் உள்ள புனித பிரான்சிஸ் தேவாலயம் மற்றும் யூத ஜெப ஆலயத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளது.
டொனால்ட் டிரம்பின் மருமகன் கேரளாவிற்கு வருகை
