தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியைச் சேர்ந்த தேவிகுமார் (43), கடந்த 2020-ம் ஆண்டு கடன் தொல்லை காரணமாக தனது இரு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி தாண்டவம் நேற்று (2.11.2026) தீர்ப்பளித்தார். இதில் தேவிகுமார் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
2 குழந்தைகளை கொன்ற தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை
