திமுக காலத்தில் மாற்று திறனாளிகளுக்கு கொடுக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை மீண்டும் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஸ்டிக்கர் ஒட்டி கொடுத்ததாக வீடியோ வெளியீடு
வீடியோ வெளியிட்ட திமுக பெண் நிர்வாகி மீது தமிழக வெற்றி கழகத்தினர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார்
திமுக திரிசூலம் பகுதி ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் மற்றும் வழக்கறிஞருமான சௌமியா தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக நிதி ஒதுக்கி பயணங்கள் தேர்வு செய்யப்பட்டு வாகனங்கள் வாங்கப்பட்டதாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் அதனை வழங்காமல் வைத்திருந்ததாகவும் அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அதிகாரிகளே அந்த வாகனங்களை பயனாளர்களுக்கு கொடுத்து விட்டதாகவும் அதன்

பின்னர் அமைச்சர் விஜய் பாலாஜி அனைவரையும் மீண்டும் வரவழைத்து அவர்களிடம் இருந்து வாகனங்களை வாங்கிவிட்டு அதில் தமிழக வெற்றி கழகம் முதலமைச்சர் சம்பந்தமான ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் கொடுத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அது மட்டும் இன்றி இது ஸ்டிக்கர் ஆட்சி நீங்கள் தேர்வு செய்து வழங்குங்கள் இப்படி ஸ்டிக்கர் ஒட்டாதீர்கள் என்பது போல் வீடியோவில் பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்லாவரம் பகுதியைச் சார்ந்த தமிழக வெற்றி கழக வழக்கறிஞர் ராஜ்குமார் என்பவர் தன் மீது பொய்யான புகார் அளித்துள்ளதாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த திமுக ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட வாகனங்கள் மீண்டும் தமிழக வெற்றி கழகம் மீண்டும் கொண்டு வந்து பயனாளிகளுக்கு கொடுத்தார் இது தொடர்பாக ஜூன் 15ஆம் தேதி வெளியிட்ட வீடியோ வெளிய வெளியிட்டதற்கு புகார் அளித்துள்ளார்கள்
இது ஒரு ஜனநாயக நாடா சர்வாதிகார நாடா என சந்தேகம் எழுந்துள்ளது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள் எனது வீட்டில் அம்மா அண்ணன் விபத்தில் சிக்கியதால் சிகிச்சை பெற்று வருகிறார்கள் குழந்தையை பார்த்துக் கொள்ளக்கூட யாரும் இல்லை இந்த நிலையில் இந்த புகாருக்கு நீங்கள் நேரடியாக வந்து ஆஜராக வேண்டும் விளக்கம் கூறி தான் ஆக வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார்கள் இதுவரையில் என்ன வழக்கு என்று தெரிவிக்கப்படாத நிலையில் 194, 352,352 /2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர் இதற்காக காவல் நிலையம் வந்து ஆஜராகி விட்டு சென்றுள்ளேன் என தெரிவித்தார்…
