உளுந்தூர்பேட்டையில் புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி யில் 500 மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த பேரணி விருதாச்சலம் சாலையில் தொடங்கி, அண்ணா சிலை, பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் வழியாக சென்று அரசு கல்லூரியில் நிறைவடைந்தது.
இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தமிழ் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் “புத்தகம் வாசிப்போம், புதிய உலகத்தை

உருவாக்குவோம்”, “ஊரெங்கும் வாசிப்பு, உலகமெங்கும் அறிவொளி”, “நூலகம் நம் கோயில், நூல்களே நம் செல்வம்”, “புத்தகமே பொக்கிஷம், படிப்பதே நமது லட்சியம்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர்.தற்போது செல்போன் மோகத்தில் மூழ்கியுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதே இந்த பேரணியின் நோக்கம் என தமிழ் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
