திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள புங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் இவருக்கு 2 மனைவிகள். வேலாயுதம் இறந்துவிட்ட நிலையில் முதல் மனைவி தங்களுக்குரிய நிலத்தை புங்கனூர் மேல தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 30) என்பவருக்கு விற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேலாயுதத்தின் 2வது மனைவியின் மகனான நந்தகுமார் ( 37) என்பவர் அந்த விவசாய இடம் தங்களுக்கு சொந்தமானது என கூறி இரண்டு நாட்களுக்கு முன்பு வயலில் இறங்கி பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார்.
இதை அறிந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பரான புங்கனூர் மேல தெருவை சேர்ந்த ரெத்தினமூர்த்தி (வயது 45) ஆகியோர் சேர்ந்து நந்தகுமாரிடம் என் வயலில் ஏன் நடுகிறாய் என கேட்டு வேலைகளை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றி கைகலப்பாக மாறியது. இதில் நந்தகுமார் தரப்பினர் தாக்கியதில் ரெத்தினமூர்த்தி, கார்த்தி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மேலும் இந்த மோதலில்
நந்தகுமார,ரெங்கராஜ் ஆகியோரும் காயம் அடைந்ததாக கூறப்பட்டது
பின்னர் இரு தரப்பும் அளித்த புகாரின் பேரில போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட ரெங்கராஜ் (59) நந்தகுமார் (37) சிவப்பிரியா ( 33) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர்
கார்த்திக், ரத்தினமூர்த்தி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர் . இதில் கார்த்திக் ரத்தினமூர்த்தி உள்ளிட்டோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
