Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டக்கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி க்ரைம்

சட்டக்கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை... திருச்சி க்ரைம்

சட்டக்கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி வரகனேரி ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம் அகமது.இவரது 3வது மகன் ஹக்கீம் அசாத் (21). சென்னையில் உள்ள சட்டக்கல்லூரி படித்து வந்தார். இவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விடுமுறையில் வீட்டுக்கு வந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹக்கீம் அசாத் தூக்கு வீட்டில் அறையில்மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தூக்கில் பிணமாக தொங்கிய
ஹக்கீம் அசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹக்கீம் அசாத் தூக்கில் தொங்கியதற்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி மத்திய சிறையில் போலீசார் சோதனையில் செல்போன் சிக்கியது

மாதம் ஒருமுறை போலீசார் சிறைத்துறை வளாகத்தில் சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மத்திய ஜெயிலில்,சிறைத்துறை அதிகாரி ராஜேஷ்கண்ணன் மற்றும் அவரது குழுவினரும் சிறை வார்டுகளைச் சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது, ​​ அறை எண் 13-க்குப் பின்னால் உள்ள புளிய மரத்திற்கு அருகே, பேட்டரியுடன் கூடிய ஒரு செல்போனன கண்டெடுத்தனர். இது குறித்துசிறை காவலர்கள் அங்குள்ள கைதிகளிடம் கேட்டபோது யாரும் பதில் சொல்லாமல் இருந்தனர். இதையடுத்து சிறை அதிகாரி ராஜேஷ்கண்ணன் கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு சிறை வளாகத்தில் செல்போனை வைத்த நபர் யார் ? என்றும், வேறு வெளி நபர்கள் சிறை வளாகத்திற்குள் செல்போனை தூக்கி வீசி சென்றார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!