கேரளம் மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே 22 வயதான எமில்டா, கணவர் அஃப்சலின் வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த அக். 6-ம் தேதி நடந்த இச்சம்பவத்தில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கணவர் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தியதாக எமில்டா தோழிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வரதட்சணை மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கணவர் அஃப்சலை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வரதட்சணைக் கொடுமை புகார்.. மனைவி தற்கொலை- கணவர் கைது
