Skip to content
Home » டிராவிட்…..எனது பந்து வீச்சில் திணறுவார் … முரளிதரன் பகீர்

டிராவிட்…..எனது பந்து வீச்சில் திணறுவார் … முரளிதரன் பகீர்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரரான இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து 800 என்ற பெயரில்  சினிமா  தயாரிக்கப்பட்டுள்ளது.

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார். முத்தையா முரளிதரன் வேடத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்து, கடும் கண்டங்களுக்குப் பிறகு ‘நன்றி வணக்கம்’ என்று கூறி விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து  விலகிகொண்டார்.

பலரும் முத்தையா முரளிதரனை ‘சிங்களர்களின் அடிவருடி. தமிழன் இல்லை, தமிழனத் துரோகி’ என்று விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில்  ‘800’ திரைப்படத்தின் ட்ரெய்லரில், “நான் என்னைத் தமிழனாக மட்டும் பார்க்கவில்லை. நான் கிரிக்கெட்டர்” என்று முத்தையா முரளிதரன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

படத்தில் முத்தையா முரளிதரனின் ஆரம்பக் கால வாழ்க்கை, பௌலிங் ஆக்‌ஷன் சர்ச்சையால் தடை, பின்னர் அந்தத் தடையிலிருந்து மீண்டு வந்தது உள்ளிட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. தமிழீழப் போராளிகளை முரளிதரன் சந்தித்ததாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஷேன் வார்னே, கபில்தேவ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் பாத்திரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்திருக்கிறார். படம் விரைவில் வெளிவர உள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது.  இதில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முரளிதரன் பேசுகையில்,டெண்டுல்கர் எனது பந்து வீச்சை நன்றாக கணித்து செயல்பட்டார். அதனை பலரால் செய்ய முடியாது. பிரையன் லாரா எனக்கு எதிராக நன்றாக ஆடினார். ஆனால் பெரிய அளவில் எனது பந்து வீச்சை அடித்து நொறுக்கியதில்லை.

ராகுல் டிராவிட்டை போன்ற சிலரை நான் அறிவேன். அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். ஆனால் அவர் ஒருபோதும் எனது பந்து வீச்சை துல்லியமாக கணித்து ஆடியது கிடையாது.  அவருக்கு  பதற்றம் இருக்கும். ஷேவாக், கவுதம் கம்பீர் ஆகியோர் எனது பந்து வீச்சை சிறப்பாக புரிந்து விளையாடினார்கள். எனது அணியில் கூட சிலர் எனது பந்து வீச்சை எப்படி ஆடுவது என்று தெரியாமல் திணறி இருக்கிறார்கள்’ .

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!