Skip to content
Home » தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை….. திருச்சி கலெக்டர் பேட்டி

தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை….. திருச்சி கலெக்டர் பேட்டி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பெற வழிகாட்டும் நிகழ்ச்சியான கல்லூரிக் கனவு என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி திருச்சி  கலையரங்கத்தில்  கலெக்டர்  பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா,
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 106பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் . மற்றும் பிளஸ்2வில்  வெற்றி பெற்ற ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

கல்வி கடன் தொடர்பாக வங்கி அரங்குகள், கல்லூரிகளில் படிப்பு தொடர்பான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.மாணவர்கள் என்னென்ன படிப்புகளை படிக்கலாம், அதன் வேலை வாய்ப்பு என அந்தந்த கல்லூரியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் மாணவ மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

கடந்த ஆண்டுகளில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற  மாணவ மாணவிகள் கல்வி பயின்றதை குறித்தும், வேலையில் சேர்ந்தது குறித்தும் தங்கள்  அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேசியதாவது:

உயரிய இலக்குகளோடு  படிப்பில் முன்னேற வேண்டும். ஆசையோடும் கனவுகளோடும் எந்த பாடத்திட்டத்தில் சேர்ந்தாலும் அதில் விடாமுயற்சியோடு வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.

இன்று நடைபெறும் நான் முதல்வன் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் 65அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் மாணவர்கள் எந்த பாட திட்டங்களை படிக்கலாம், வங்கிகளில் கடன் தொடர்பான விளக்கங்கள் உடனடியாக அவற்றை பெற்றுக் கொள்ளும் விதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் தொடர்பாக தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர் அழைத்து முறையாக வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து வலியுறுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அதிகாரிகளும் நகராட்சி, மாநகராட்சி, வார்டு ஆகிய பகுதிகளில் கிராமங்களில் உட்பட எந்தெந்த இடங்களில் தண்ணீர் பற்றாகுறை என்பதை அறிந்து அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடி தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் போர்வெல் மூலம் தண்ணீர் கொடுக்கவும் பற்றாக்குறை உள்ள இடங்களில் மாற்று முறைகளில் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியை பொருத்தவரை 65வார்டுகளில் 35 வார்டுகளில் தினந்தோறும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற வார்டுகளில் குடி தண்ணீர் சுழல் முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் உரிய சான்றிதழ் கொடுக்கும் பொழுது கல்வி கடன் 100% வழங்கப்படும்.திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு
190 சிசிடிவிகள் மூலம் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.தினந்தோறும் காலையில் அனைத்து சிசிடிவியும் சரியான முறையில் இயக்கப்படுகிதா என பார்வையிட்டு உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறேன்.திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை சிசிடிவியில் எந்த இடர்பாடும் கிடையாது.

திருச்சி மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும் கால்நடைகள் மற்றும் நாய்கள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்துவதற்கான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அதற்கான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கால்நடை வளர்ப்புகளுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டு வருகிறது.பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் முழுவதும் வருடம் ஒரு முறை குழுவை கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வலியுறுத்தப்படுகிறது.
இல்லையென்றால் வாகனத்தில் உரிமைகளை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!