சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி பேசியதாவது…
மின்விநியோகத்தை கண்காணிக்கும் இயக்குநர் பதவியிடம் காலியாக உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் செல்போன் செயல்படவில்லை. மின்வாரியத்தில் வௌிப்படைத்தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும். மின்சார வாரிய அதிகாரிகளின் பழைய எண்களை மாற்றக்கூடாது. கரூர் மாவட்டத்துக்கு 5 ஆண்டில் ரூ.5000 கோடிக்கு வளர்ச்சி திட்டம் தந்தை முக ஸ்டாலினுக்கு நன்றி. 2006-2011 ரை 2.09 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு. திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டது. திராவிட மாடல் ஆட்சியில் 35 லட்சம் மின்இணைப்புகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக மின்கட்டணம் வந்துள்ளதாக மக்கள் கூறினார்கள். மின்விநியோகத்தை கண்காணிக்கும் இயக்குநர் பதவியிடம் காலியாக உள்ளது.
ஒரு வார்த்தை பேசினால் மறுவார்த்தை பேச எங்களுக்கு தெரியும். பதில் பேசாமல் திரும்பிச் செல்வதற்காக நாங்கள் வரவில்லை. பேசிவிட்டு நீக்கிவிட்டால் ஊமையாக வந்து செல்ல நாங்கள் வரவில்லை. 5 ஆண்டுகளில் இதே ஆட்களை வைத்துதான் எந்த தடையும் இல்லாமல் மின்சாரம் வழங்கினோம். மின்கட்டமைப்பு முழுமையாக வலுத்தப்பட்டு மின்சார விநியோகம் சீராக வழங்கப்பட்டது.
கொள்கை விளக்க குறிப்பு இரவு 10 மணிக்கு கொடுத்தார்கள். கொள்கை விளக்க குறிப்பை ஒரு நாள் முன்னதாக வழங்க வேண்டும். என்று இவ்வாறு தெரிவித்தார்.
