Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லாரிக்குள் சடலமாக கிடந்த டிரைவர்… திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

லாரிக்குள் பிணமாக கிடந்த டிரைவர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சாந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மருதை (வயது 40) இவர் வினோத் என்பவரிடம் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் திருச்சி தேவதானம் பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் கடந்த 29ந்தேதி லாரியை நிறுத்திவிட்டு வாகனத்திற்குள் மருதை தூங்க சென்று விட்டார். பிறகு மறுநாள் நேற்று காலை லாரி உரிமையாளர் வினோத் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருதையை எழுப்ப முயன்ற போது அவர் நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. பிறகு அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது மருதை இறந்து விட்டார் என தெரிந்து அதிர்ச்சிடைந்தார். இது குறித்து அவரது மனைவி மஞ்சுளாவுக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் திருச்சி கோட்டை போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியில் பிணமாக கடந்த மருதை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 கிலோ கஞ்சா பறிமுதல்.. வாலிபருக்கு வலைவீச்சு

திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி புது கழிவறை அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து எடமலைப்பட்டி புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது ஒரு நபர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். போலீசார் வருவதை தெரிந்து கொண்ட அந்த நபர்தனது கையில் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து போலீசார் அங்கிருந்த 5 கிலோ 160 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஆகும் இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய ராம்ஜி நகர் மில் காலனி சேர்ந்த உதயகுமார் என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

10கிலோ புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் ஸ்டீபன் ராஜ் (வயது 41) இவர்அந்தப் பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில் உறையூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உறையூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையில் போலீசார் கீழ பாண்டமங்கலத்தில் உள்ள ஸ்டீபன் பெட்டி கடைக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் 10 கிலோ
புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஸ்டீபன் ராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!