Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை உதவி ஆய்வாளருக்கு போதை ஒழிப்பு விருது அறிவிப்பு

போதை பொருள் தடுப்பு வழக்கு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனபாலனுக்கு முதல்வரின் “போதை ஒழிப்பு விருது” அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய 15 போலீஸ் காவலர்களுக்கு தமிழக முதல்வரின் “போதை ஒழிப்பு விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் தனபாலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் தனபாலன் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 55 வழக்குகளில் 169 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்குகளில் 161.4 கிலோ கஞ்சா, 77 கிராம் மெத்தபெட்டமைன், 4.12 டன் குட்கா பொருட்கள், 29 இரு சக்கர வாகனங்கள், 5 கார்கள் பறிமுதல் செய்துள்ளார். விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள காவலர்களுக்கு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் விருதுகளை வழங்க உள்ளார்.

error: Content is protected !!