Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதை மாத்திரை விற்பனை- ரவுடி கைது- திருச்சி க்ரைம்

போதை மாத்திரை விற்பனை- ரவுடி கைது- திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி நவ 18- திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகர் நாலாவது தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார் இவரது மகன் கார்த்திகேயன் (வயது 19)இவர் திருச்சி அருகே உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுஅறிவியல் படித்து வந்தார் இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் மேலும் கடந்த ஆறு மாத காலமாக தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நிலையில் நேற்று வீட்டில் அவரது தாயார் ராதா வீட்டு வேலைக்கு சென்று இருந்தால் இந்நிலையில் மாலை 6 மணி அளவில் அவர் வேலையில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தார் வீட்டுக்குள் வந்து பார்த்த பொழுது அறையில் மின்விசிறியில் கார்த்திகேயன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் ராதா உடனடியாக அரியமங்கலம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார் தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டீக்கடை மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை

கடன் தொல்லையால் விபரீதம் திருச்சி நவம்பர் 18 திருச்சி கீழ தேவதானம் காவிரி ரோடு வீரமுத்து நகர சேர்ந்தவர் நரசிம்மன் வயது 62 இவர் கீழ தேவதான பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார் இந்நிலையில் இவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் மாத்திரை சாப்பிட்டு வந்தார் இந்நிலையில் இவருக்கு நிறைய கடன் பிரச்சனை இருந்த காரணத்தால் மன உளைச்சலில் இருந்து வந்தார் இதையடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நரசிம்மன் வீட்டின் கூரை கயிற்றில்
தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய நரசிம்மன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை பற்றி வருகின்றனர்

போதை மாத்திரை விற்பனை- ரவுடி கைது

திருச்சி காந்தி மார்க்கெட் கல்பாளையம் சந்திப்பு அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து காந்தி மார்க்கெட் சப்-இன்ஸ்பெக்டர் தயாகரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர் அப்பொழுது அங்கு ஒரு வாலிபர் போதை மாத்திரங்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது முதலிடத்தில் போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தபோது அரங்கனேரி பகுதியை சேர்ந்த சிவக்குமார் வயது 24 என்பது தெரியவந்தது இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து போதை மாத்திரை, ஊசிகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்

error: Content is protected !!
Secret Link