Skip to content
Home » திருச்சி தொகுதி வேட்பாளர்கள் என்ன சொன்னாங்க….

திருச்சி தொகுதி வேட்பாளர்கள் என்ன சொன்னாங்க….

  • by Senthil

திருச்சியில் நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் போது நடைபெற்ற கசப்பான சம்பவங்களை குறித்து கேட்டதற்கு எனக்கு தற்போது இருக்கும் எண்ணமெல்லாம் வெற்றி வெற்றி வெற்றி என்ற ஒரே இலக்கு மட்டும் தான். அதை நோக்கி தான் நாங்கள் அனைவரும் பயணிக்கிறோம். எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை. அமைச்சர் நேரு அவரது மகன் அருண் நேருவை போலவே என்னையும் ஒரு மகனாக நினைக்கிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் வரை வந்து என்னை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். நேற்று நடந்த சம்பவம் குறித்து வைகோவிடம் எதுவும் நான் பேசவில்லை என்றார்.

பாஜக கூட்டணியில் அங்கம் வைக்கும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்து விட்டது. மதிமுக, விடுதலை சிறுத்தைகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதேபோல நாம் தமிழர் கட்சிக்கும் அவர்கள் கேட்ட சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை.
வருமான வரி துறை அமலாக்கத்துறை போல தேர்தல் ஆணையமும் ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் அவர்களுக்கு ஆதரவாக உள்ளது.

ம.தி.மு.க விற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் இரண்டு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளையுடன் அந்த இரண்டு வார காலம் நிறைவு நிறைவடைய போகிறது
ஆனால் இதுவரை எங்களுக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இருந்தாலும் நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றார்.

துரை வைகோ வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பொழுது அவருடன் திமுக திருச்சி மேற்கு மாநகர செயலாளரும் மேயருமான அன்பழகன், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ் பழனியாண்டி, புதுக்கோட்டை திமுக மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன், மதிமுக துணை பொதுச்செயலாளர் ரொஹையா ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

 

திருச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணாததால் நான் களம் இறக்கப்பட்டு இருக்கிறேன் – அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் பேட்டி…

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி மாமன்ற உறுப்பினராக உள்ள செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டிருந்தார். இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரதீப்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வே டு மனுத்தாக்கல் என்பது நிர்வாகிகள் சாருபால தொண்டைமான், ராஜசேகர், குணா மற்றும் பாரத ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்

கடந்த 20 ஆண்டுகளாக திருச்சியில் பாராளுமன்ற உறுப்பினரை யாரையும் பார்க்கவில்லை,அந்த குறையை போக்குவதற்காக நான் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளேன்களம் இறக்கப்பட்டுள்ளேன் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறுவேன்..

திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது குறித்த கேள்விக்கு?

எம்பி ஆக வெற்றி பெற போகிறேன், எதற்காக எனக்கு அந்த பதவி நான் நம்பிக்கையுடன் உள்ளேன்நான் நம்பிக்கையுடன் உள்ளேன் அதனால் தான் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தேன்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு பிரசாந்த் கிஷோர் தேவைப்பட்டார். எங்கள் வேட்பாளர்கள் எல்லாம் மண்ணின் மைந்தர்கள் தான். மேலும், படித்தவர்கள், இளையவர்கள், புதியவர்கள் எனவே அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதுவார்கள்

எனது வார்டு மக்கள் என்னை கவுன்சிலராக தேர்ந்தெடுத்து உள்ள நிலையில நான் ராஜினாமா செய்திருப்பது எனக்கு வருத்தம் தான். ஆனால் என்னுடைய எல்லையை விரிவாக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக திருச்சிக்கு வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி வருவார்.

திருச்சி பொதுக்கூட்டத்தில் திமுகவுக்கும், அதிமுகவுக்கு மட்டுமே போட்டி என எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளது குறித்து கேள்விக்கு?

5வருடத்திற்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி என்ன பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். டிடிவி தினகரன், பன்னீர்செல்வம், பிரதமர் மோடி பற்றியும் என்ன பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும் அவர் ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்.

இன்றைக்கு, நாளைக்கு என ஒரு நிலைப்பாடாக கூட மாற்றிப் பேசுவார் பேசுவதை ஒன்றும் பெரிது படுத்த தேவையில்லை என தெரிவித்தார்.

 

———————-

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தனது வேட்பு மனுவை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம்
தாக்கல் செய்தார்…

தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக வெற்றி வேட்பாளராக புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா போட்டியிடுகின்றார்.

அவர், தனது வேட்பு மனுவை திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் வழங்கினார்.

அப்போது, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட செயலாளர்கள் ப.குமார், சீனிவாசன், அமைப்புச் செயலாளர் வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக, திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா, நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அதிமுகவினர் புடை சூழ, உற்சாக வெள்ளத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதில், திருச்சி மாவட்ட செயலாளர்கள் ப.குமார், ஜெ.சீனிவாசன், கழக அமைப்பு செயலாளர் புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கழக அமைப்பு செயலாளர்கள் எஸ்.வளர்மதி, டி.ரத்தினவேல், ஆர்.மனோகரன், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் சி.அரவிந்தன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சி.கார்த்திகேயன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெ.இப்ராம்ஷா, சிறுபான்மையினர் நல பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.புல்லட் ஜான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

 


சின்னம் எங்களுக்கு பெரிதல்ல சீமான் எங்களது அடையாளம் – திருச்சி பாராளுமன்ற வேட்பாளர் ராஜேஷ் பேட்டி

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் அறிவிக்கப்பட்டார். அவர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வேட்பாளர் ராஜேஷ்

நாங்கள் வெற்றியை தீர்மானித்து தான் களத்திற்கு வந்துள்ளோம். மக்களுடைய ஆதரவு இருக்கிறது.
கடந்த 15 வருடங்களாக திருச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் இருந்தாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. நாங்கள் மக்களோடு மக்களாக இருந்து வருகிறோம்.
ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட உய்யகொண்டான் சுமார் 13 கிலோமீட்டர் தூரத்திற்குசுமார் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு. வாய்க்காலை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..
நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் அரியமங்கலம் குப்பை கிடங்கு அகற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
துவாக்குடி பால் பண்ணை சர்வீஸ் சாலை பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அந்த சாலையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை பகுதியில் முந்திரி தொழிலை மேம்படுத்தும் வகையில் உலக அளவில் அதற்கான புவிசார் குறியீடு பெற்று பதப்படுத்தும் தொழிற்சாலை ஏற்படுத்தி அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

சோமரசம்பேட்டை, அல்லித்துறை, வயலூர் உள்ளிட்ட பகுதிகளில் பூக்களின் உளைச்சல் அதிகமாக உள்ளது. அப்பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி மாநகரத்தில் கட்டமைப்பு மற்றும் பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி மக்கள் என்னை வெற்றி பெற செய்தால் உலக அளவில் திருச்சி பாராளுமன்ற தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக கொண்டு வருவேன்

உங்களுக்கான சின்னம் ஒதுக்கப்படவில்லையே என்ற கேள்விக்கு?

சின்னம் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கினால் கூட அந்த சின்னத்தை எப்படி மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்பது எங்களுக்கு தெரியும்..

எங்களைப் பொறுத்தவரை சீமான் தான் சின்னம், அடையாளம். அதனை வைத்தே நாங்கள் பயணித்து வருகிறோம்.

மைக் சின்னம் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை விட சிறந்த சின்னத்தை பரிசீலனை செய்து கேட்டு உள்ளோம் நாளை அந்த சின்னம் கிடைக்கும் என நம்புகிறோம்.

திருச்சியில் நான்குமுனை போட்டி உள்ளது அதில் வேட்பாளர்கள் அனைவருமே வெளி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கிறார்கள் அதை நீங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

அதை நான் உடைப்பேன். மக்கள் மத்தியில் அதுவும் பேசும் பொருளாக உள்ளது அதை நான் நிச்சயம் மாற்றி காட்டுவேன்.

நான் பிறந்த, வளர்ந்த ஊர் அனைத்துமே திருச்சி தான் அதனால் மக்கள் என்னை எளிதாக அணுக முடியும்..

நாலு முனைப் போட்டி என்பது வெளியில் இருந்து பார்ப்பதற்கு தான். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தனித்து நிற்கிறோம், துணிந்து நிற்கிறோம். மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கட்சியின் கூட்டணியுடன் இருக்கிறார்கள்.
கண்டிப்பாக நாம் தமிழர் கட்சியினுடைய வெற்றி உறுதி என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!