Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துரை வைகோ எம்பி மகள் திருமண விழா.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

மதிமுக பொதுச்செயலாளர் மக்கள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான  வைகோ எம்பியின் பேத்தியும் மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான  துரை வைகோ எம்பியின் மகள் வானதி ரேணு- கோகுல கிருஷ்ணன் ஆகியோரது மணவிழா நிகழ்வு சென்னை திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தேர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வின் போது மதிமுக உயர்நிலைகுழு உறுப்பினர் ஆர் ஆர் மோகன் குமார்,  மாணவரணி மாநில அமைப்பாளர் பால சசிகுமார், கரூர் மாவட்ட மதிமுக செயலாளர் ஆசை சிவா உடன் இருந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!