Skip to content
Home » அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறையாம்.. E.D வக்கீலால் பரபரப்பு..

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறையாம்.. E.D வக்கீலால் பரபரப்பு..

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்தஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அமலாக்கத் துறைதரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோரும், மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, அமித்ஆனந்த் திவாரி, என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு  வக்கீல் என் ஆர் இளங்கோ.. கைதுக்கான காரணங்களை தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட கைது மெமோவில் செந்தில்பாலாஜி கையெழுத்திட மறுத்தார் எனக் கூறுவதற்கு எந்த ஆதாரமும்இல்லை. இதன்மூலம் அவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் கைதானவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றார். தொடர்ந்து அமலாக்கப்பிரிவு வக்கீல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா..  செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டுதான் அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க, அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் முதலில் அவர் சட்டவிரோதமாக அமலாக்கத் துறையின் காவலில் இல்லை. தற்போது அவர் நீதி மன்றக் காவலில் உள்ளார். நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டதை எதிர்த்தோ அல்லது ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தோ இந்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் இந்தவழக்கு, விசாரணைக்கு உகந்ததுஅல்ல. சட்டவிரோத பணப்பரிமாற்றதடைச்சட்டத்தில் ஆதாரம் இருந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம். உரிய ஆதாரமின்றி கைது நடவடிக்கை மேற்கொண்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு 2 ஆண்டுசிறை தண்டனையுடன், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை உள்ளது என்றார். இருதரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு,வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!