Skip to content
Home » துருக்கி நிலநடுக்க பலி 41 ஆயிரம் ஆனது

துருக்கி நிலநடுக்க பலி 41 ஆயிரம் ஆனது

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 100-க்கும் மேற்பட்ட நிலநடுக்கமும் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 41 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. துருக்கியில் ஏற்கனவே பல முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அவை எல்லாவற்றையும் விட இந்த நிலநடுக்கத்தில் தான் அதிகமான உயிர்பலி ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வார காலம் ஆன பின்னும், தெற்கு துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள நபர்களின் குரல் இன்னும் கேட்கிறது என மீட்பு குழுவினர் கூறுகின்றனர். 200 மணிநேரத்திற்கு பின்னர் இடிபாடுகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்ட சம்பவங்களும் காணப்படுகின்றன. இதனால், இன்னும் மக்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் எழுகிறது. அவர்களை தேடி கண்டறிய வேண்டும் என்று மீட்பு பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!