ஆப்கானிஸ்தான் அருகே உள்ள மலைப்பாங்கான நாடு தஜிகிஸ்தான். இந்த நாட்டில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவில், 20 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கசேத விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. கடநி்த 6ம் தேதி துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 என பதிவாகி இருந்தது. அதில் 46 ஆயிரம் பேர் பலியானார்கள். இந்த நிலையில் இன்று தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு ரிக்டர் அளவில் 6. 8 ஆக பதிவாகி உள்ளது.
