Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி …. மேலும் ஒருவரை மிரட்டி பணம் பறிப்பு

திண்டுக்கல் அரசு  டாக்டர்   சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம்  லஞ்சம் பெற்றபோது  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி , லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு  திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் அங்கித் திவாரியை 2 நாள் காவலில் எடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவரிடம் நேற்று இரவு நடத்திய விசாரணையில்,  அங்கித் திவாரி, டாக்டர் சரேஷ் பாபுவை போல மேலும் ஒருவரை மிரட்டி பணம் பறித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவில் அங்கித் திவாரி இதுவரை எத்தனை போரை மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பது தெரியவரும்

இந்த நிலையில்  அங்கித் திவாரியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!