Skip to content
Home » வெற்றி வாய்ப்பு எப்படி? வேட்பாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை

வெற்றி வாய்ப்பு எப்படி? வேட்பாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை

  • by Senthil

சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை இந்த ஆலோசனை நடந்தது.

9 மாவட்ட செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது, தொகுதி நிலவரம் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில்  ஒவ்வொரு வேட்பாளரிடமும் ஆலோசித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!