Skip to content
Home » ஈஷா சார்பில் திருச்சியில் விளையாட்டு போட்டி…. 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

ஈஷா சார்பில் திருச்சியில் விளையாட்டு போட்டி…. 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

ஈஷா கிராமோத்வசம் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலையா மேல் நிலை பள்ளியில் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியை நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து ஈஷா கிராமோத்சவம் குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-

ஈஷா அவுட்ரீச் சார்பில் கடந்த 2004ம் ஆண்டு முதல் நடத்தப்படும் கிராமோத்சவம் என்னும் கிராமிய விளையாட்டின் 15 வது கிராமோத்சவம் என்னும் கிராமிய விளையாட்டு திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது. முதல்கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் வரும் 10ம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. அதன்படி திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலையா மேல் நிலை பள்ளியில் நடைபெறும். போட்டிகளில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர். நாகப்பட்டிணம், திருவாரூர் மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டியும், இருபாலருக்கான கபடி போட்டிகளும் நடைபெறவுள்ளன.

வாலிபால் போட்டியில் மொத்தம் 28 அணிகளும், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் தலா 7அணிகளும் பங்கேற்க உள்ளன. பெண்களுக்காக த்ரோபால் போட்டி நடைபெறும். இப்போட்டிகள் காலை 8மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும் இப்போட்டிகளில் கிராமப்புற அணிகள் பங்கேற்கும்.

மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள். வீரர்களுக்கான உணவு, தங்குமிடம் போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும். இறுதிப்போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் நிகழ்சியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்க உள்ளனர். இதில்
ஒட்டுமொத்தமாக ரூ.55 லட்சம் வரை பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!