Skip to content
Home » ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி கோவிலில் 4 சிலைகள் உடைப்பு… பரபரப்பு….

ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி கோவிலில் 4 சிலைகள் உடைப்பு… பரபரப்பு….

  • by Senthil

பெரம்பலூர் அருகே சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. இதில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் தவமணி என்பவர் கோயிலை இன்று காலை 6:30 மணியளவில் தூய்மை செய்வதற்காக வந்து பார்த்த போது கோவிலில் நுழைவு வாயிலின் சிறிய கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று அவர் பார்த்த போது கோவிலின் உட்பகுதியில் விநாயகர் சிலைக்கு அருகே இருந்த 3 அடி உயரம் கொண்ட கற்களாலான முருகன் சிலையும், 3 1/2 அடி உயரம் கொண்ட கருடாழ்வார் மர வாகன சிலையும் 3 அடி உயரம் கொண்ட பைரவர் சிலை மற்றும் 4 உயரம் கொண்ட சிங்க வாகன சிலை என 4 சிலைகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவில் செயல் அலுவலர் ஹேமாவதியிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் ஹேமாவதி பாடாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாடலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்களான பாஸ்கர் மற்றும் ராமராஜன் ஆகியோர் மோப்ப நாய் பிரிவு மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கோவிலில் பழமை வாய்ந்த பதிவேடுகளும் எரிக்கபபட்டிருந்தன. மேலும் கோவிலில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் நேற்றிரவு 11:30 மணியளவில் கோவிலினுள் நுழைவுதும் சிலைகளை உடைப்பது ம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி கோவிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்ததில் சிலையை உடைத்தவர் செட்டிகுளம் அருகே உள்ள மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த நல்லுசாமி என்பவரின் மகனான மனநலம் பாதிக்கப்பட்ட 38 வயதுடைய நபரான செல்வராஜ் என்பது தெரியவந்ததாகவும் பின்னர் அவர் சிறிது நேரத்தில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் செல்வராஜை கைது செய்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இது திட்டமிட்டு செய்த செயல் இல்லை தொடர்ந்து இது போன்ற சம்பவங்களை தவிர்க்க கோவில்களிலா சிசிடிவி கேமிராக்கள் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாற்று மிக்க இந்த கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!