தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஓடைத் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் சுப்பையா (70). இவர் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் புதூர் பஜாரில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஓடைத் தெரு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர் பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுப்பையா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, உயிரிழந்த சுப்பையாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
