Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேலூர் அருகே ஸ்கூட்டர் டயர் வெடித்து முதியவர் பரிதாப பலி

வேலூர் அருகே ஸ்கூட்டர் டயர் வெடித்து முதியவர் பரிதாப பலி

வேலூரில் மகள் வீட்டுக்கு இனிப்பு பலகாரம் கொண்டு சென்ற முதியவர் ஸ்கூட்டர் டயர் வெடித்ததில் கவிழ்ந்ததில் கீழே விழுந்து பலியானார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்தவர் பெருமாள்(80).

இவர் பூட்டுத்தாக்கில் வசிக்கும் தனது மகள் சரிதாவுக்கு இனிப்பு பலகாரங்கள் வழங்குவதற்காக நேற்று காலை குடியாத்தத்தில் இருந்து ஸ்கூட்டரில் பூட்டுத்தாக்கு நோக்கி சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டரை அவரது மகன் கணபதி(48) என்பவர் ஓட்டிச் சென்றார்.

வேலூர் கொணவட்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே காலை சுமார் 9.30 மணியளவில் சென்றபோது திடீரென ஸ்கூட்டரின் டயர் வெடித்தது. இதில் ஸ்கூட்டர் நிலைதடுமாறியதில் தந்தையும், மகனும் கீழே விழுந்தனர்.

இதில் தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியன் தடுப்புச்சுவரில் பெருமாளின் தலைமோதியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திேலயே அவர் பலியானார். கணபதி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற வடக்குபோலீசார் பெருமாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!