திருச்சி முசிறி பிள்ளப்பாளையம் கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ராஜாமணி (61). இவர் ஒரு தனியார் டவுன் பஸ்ஸில் நடுப்பட்டியிலிருந்து பிள்ளபாளையம்
நோக்கி சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் ராஜாமணி பஸ் படிக்கட்டு அருகாமையில் நின்று கொண்டிருந்தார். தாத்தையாங் கார்பேட்டை கோணங்கி பட்டி மாரியம்மன் கோவில் அருகே வளைவில் பஸ்சை டிரைவர் திருப்பியபோது, எதிர்பாராத விதமாக ராஜாமணி பஸ்சிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூக்கு வழியாக ரத்தம் வழிந்தது பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார்
இது குறித்து அவரது மகன் பாண்டியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
