Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் நாளை தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை   தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். சென்னையில் இருந்து காலையில்  புறப்படும் முதல்வர் மு.க. ஸ்டாலின்,  மாலையில் திருச்சி சிறுகனூரில் நடைபெறும்  தேர்தல் பிரசார தொடக்க விழாவில் பங்கேற்று, திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ,  பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர்  அருண் நேரு ஆகியோைரை  ஆதரித்து  பிரசாரம் செய்கிறார். கூட்டத்தில்  அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் பங்கேற்று பேசுகி்றார்கள்.

முதல்வர் பிரசாரத்திற்காக  சிறுகனூரில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை சிறுகனூர் சென்று மேடை அமைக்கும் பணியை  பார்வையிட்டார்.

23ம் தேதி மாலை தஞ்சை, நாகை தொகுதி திமுக,  இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து  முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!