பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மக்களிடையே நடைபெற்ற உரையாடலில் கூறியதாவது, பாகிஸ்தானில் பல பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக இருப்பது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவது மட்டுமே. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறாத வரை, நாடு (பாகிஸ்தான்) மூழ்கிவிடும் என்று நாங்கள் அனைவரும் பயப்படுகிறோம். தோல்வி பயம் காரணமாக புதிய தேர்தல்களுக்கு தற்போதைய அரசாங்கம் அஞ்சுகிறது. மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்திற்கு தேர்தல் மூலம் பாடம் கற்பிக்க வேண்டும்.
இந்தத் திருடர்களின் பெயர்கள் என்றென்றும் அழிக்கப்படும் அளவுக்கு அவர்களுக்கு தோல்வியை கொடுக்க வேண்டும். நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கும் நாட்டில் நீதியை நிலைநாட்டுவதற்கும் கடினமான முடிவுகள் எடுக்கப்படும் போது நாடு “நிமிர்ந்து நிற்கும்” என்று இம்ரான் கான் கூறினார்.
மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஏப்ரலில் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, அத்தகைய ஆட்சி மாற்றத்திற்கு யார் காரணம்? பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் (ஓய்வு) கமர் ஜாவேத் பஜ்வா தனது கட்சிக்கு எதிராக “சதியில்” ஈடுபட்டார் என்று இம்ரான் கான் குற்றம் சாட்டினார். இம்ரான் கான் தனது உரையின் தொடக்கத்தில், ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கத்தின் கீழ் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து புலம்பினார். நாட்டிற்கு புதிய மற்றும் நியாயமான தேர்தல்கள் தேவை என்று அவர் மீண்டும் தெரிவித்தார்.