Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் மின்வாரிய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

திருச்சியில் மின்வாரிய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு – திருச்சி மெட்ரோ வட்டம் சார்பில் இன்று காலை மிளகுபாறையில் உள்ள துணை மின் நிலைய வளாகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மின் துறையைப் பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும்,
அனைத்து பகுதி மக்களையும் பாதிக்கும் மற்றும் மின் விநியோகத்தைத் தனியாரிடம் விடும் ஸ்மார்ட் மீட்டர் திட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள மின் பாதைகள் மற்றும் மின் உற்பத்தியைத் தனியார் மயமாக்கும் பிபிபி
திட்டத்தை ரத்து செய்து, அரசே ஏற்று நடத்த வேண்டும், கிராஜிவிட்டி தொகையை ரூ.20 லட்சத்திலிருந்து 25லட்சமாக அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போலவும், குடும்பநல நிதி 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தியதை முன் தேதியிட்டு 1.9.21 முதல் மின் ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக்கு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மின்துறை பொறியாளர் அமைப்பு துணை பொதுச்செயலாளர் இருதயராஜ், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் பழனியாண்டி,
டி.என்.இ.பி எம்ப்ளாயீஸ் பெடரேஷன் தலைவர் சத்திய நாராயணன், செயலாளர் சிவச்செல்வன்,
தொமுச கோட்ட செயலாளர் பாஸ்கரன், பொறியாளர் உட்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!