கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவன ஊழியர்கள் சிலர் பணியிடை நீக்கம் மற்றும் பணி இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து இந் நிதி நிறுவன ஊழியர்களில் சிலர் ஆர்ப்பாட்டம் .

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் இயக்குனர்களுக்கான தேர்தல் இந்த மாத துவக்கத்தில் நடைபெற்றது .
அந்த தேர்தலில் ஆளும் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் ஆன்லைனில் பதிவு செய்யாமல் நேரடியாக தாக்கல் செய்ததால் அவர்கள் இந்த தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
இதனால் இந்தத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட நான்கு நபர்களும் வெற்றி பெற்றனர் .
அப்போது இந்த நிதி நிறுவன நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்களில் சிலர் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினர் .

இது இந்த நிதி நிறுவன நிர்வாகத்திற்கு தெரிய வரவே நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்ட சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது .
சிலர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர் .
ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும்,
பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று இந்த நிதி நிறுவன ஊழியர்களில் சிலர் இந்த நிதி நிறுவனத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிதி நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.
