தமிழக அரசின் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், கடந்த 15.11.2026 அன்று சென்னையில் டாஸ்மாக் கடையில் வாடிக்கையாளர் ஒருவரிடம் காலி பாட்டிலை வாங்க விற்பனையாளர் விக்டர் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது விதிமுறை மீறல் என உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னை (தெற்கு) மாவட்ட மேலாளர் ஜஸ்வந்த் கண்ணன், விக்டரை 16.11.2026 முதல் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், கடை மேற்பார்வையாளர் கேசவனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காலி மதுபாட்டில் விவகாரம்.. விற்பனையாளர் சஸ்பெண்ட்
