Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை ஏர்போட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவை ஏர்போட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவை வருகை புரிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா, கோவைக்கு பெரியார் அறிவுலகம் தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலனுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோவை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி எம்எல்ஏ தலைமையில்

நடைபெற்ற வரவேற்பில், முன்னாள் அமைச்சர்கள் கேஎன்.நேரு, எவ.வேலு, முத்துச்சாமி, மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், சக்கரபாணி, கழக துணைப்பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர்

துரை செந்தமிழ் செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், மேயர் ரங்கநாயகி, எம்பிக்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, பிரகாஷ், எம்எல்ஏகள் ஜெயராமகிருஷ்ணன், வசந்தம் கார்த்திகேயன், மாநில தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக், முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், கழக தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை விமானநிலையத்தில் இருந்து செல்லும் வழியில் கழக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

error: Content is protected !!