மத்திய அரசின் EPFO நிறுவனத்தில் வேலை…

154

மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் காலியாக உள்ள என்ஃபோர்ஸ்மென்ட் ஆபீசர் / அக்கவுண்ட்ஸ் ஆபீசர் பதவிக்கு யுபிஎஸ்சி தேர்வாணையம் மூலம் காலியிடங்கள் நிரப்பப்படுகிறது.

மொத்தம் 421 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. SC – 62, ST – 33, OBC – 116, EWS – 42, UR – 168 என்ற வகையில் இடஒதுக்கீடு உள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதற்கான யுபிஎஸ்சி தேர்வுகள் 4 அக்டோபர் 2020 அன்று நடைபெறுகிறது.

தேர்வு நேரம் 2 மணி நேரம் தேர்வு நடைபெறும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேள்விகள் இருக்கும். தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. மூன்று தவறான கேள்விகளுக்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண் என்ற வகையில் அமைகிறது. தேர்வுக்கான பாடத்திட்டம் ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட யுபிஎஸ்சி தேர்வு எழுத ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://www.upsconline.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு யுபிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY