இபிஎஸ்-ஒபிஎஸ் நேரடி மோதல்..5 மணி நேரம் நடந்தது என்ன?

1177
Spread the love

யார் முதல்வர் வேட்பாளர் என்பதற்காக தான் செயற்குழு கூட்டம் என்றே அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறிவந்தனர். அதற்கு தகுந்தாற்போல் இபிஎஸ் தரப்பில் அமைச்சர் வேலுமணி, தங்கமணி ஆகியோர் முன்கூட்டியே  வேண்டிய மாவட்ட செயலாளர்களிடம் எப்படி ஆரம்பிக்க வேண்டும், எப்படி முடிக்க வேண்டும் என்பது குறித்து டிப்ஸ் கொடுத்திருந்தனர். இந்த தகவல் தெரிந்து ஓபிஎஸ்சின் மகன் எம்பி ரவிந்ரநாத் குமார் தனது பங்கிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்களை இறக்கி வாசலில் நிற்க வைத்து ஓபிஎஸ் வாழ்க என கோஷம் போட ஏற்பாடு செய்திருந்தார். இந்த பரபரப்பிற்கு மத்தியில் காலை 10 மணிக்கு முக்கிய நிர்வாகிகள் வந்து சேர கூட்டம் ஆரம்பித்தது. முதலில் தீர்மானம் படிக்கப்பட்டு ஓப்புதல் பெறப்பட்டது. சரி உறுப்பினர்கள் கருத்துகளை கூறலாம் என மைக்கில் அறிவிக்க உடனடியாக இபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதனை உடனடியாக அறிவியுங்கள் என சத்தம்போட முக்கிய நிர்வாகிகள் சத்தம் போடாமல் இருக்குமாறு அறிவுறுத்தினர். தடுமாறி பேச எழுந்தவர் அவைத்தலைவர் மதுசூதனன் .. எனக்கு வயது ஆகி விட்டது என்றும் என்னை மாற்றி விட்டு வேறு ஓருவரை அவைத்தலைவராக்க போவதாக கேள்விப்பட்டேன். என்னை மாற்ற வேண்டும் என்றால் பொதுக்குழுவில் தான் முடிவு எடுக்க வேண்டும். எனக்கு பதவி கொடுத்தது அம்மா எனவே யாரும் என்னை மாற்ற நினைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என கூறி விட்டு அமர்ந்தார். உடனே ஓபிஎஸ் எழுந்து … நான் மீண்டும் இணைந்த போது ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் பதவிவழங்குவது என முடிவு செய்யப்பட்டது. துணை முதல்வர் என்பது இந்த காலகட்டத்தில் மட்டும் தான். எனவே நான் தொடர்ந்து துணை முதல்வராகவே இருப்பேன் என யாரும் நினைத்துக்கொள்ள கூடாது. எனவே என்னை இந்த முறை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சப்ஜெக்ட்டை ஆரம்பித்தார்.  உடனே ஒரு தரப்பினர் கூச்சல் போட ஆரம்பித்தனர். உடனே எழுந்த எடப்பாடி  என்ன இப்படி திடீருனு சொல்றீங்க. நாங்க அது மாதிரி எல்லாம் பேசலையே.. அதே மாதிரி அடுத்த முறை யார் முதல்வர் என்கிற பேச்சே அப்போது வரவில்லையே? தவறான தகவல்களை கூட்டத்துல பேசக்கூடாது என்றதும் சூடான ஓபிஎஸ்..இங்க பாருங்க இந்த ஓபிஎஸ் அம்மாவால அடையாளம் காட்டப்பட்டவன். நீங்க அப்படி இல்ல. உங்கள சசிகலா தான் முதல்வர் ஆக்குனாரு.. என்றாரற் டென்ஷனாக..

விடாப்பிடியாக இபிஎஸ்.. இங்க பாருங்க இந்த ஆட்சிக்கு எதிரா ஓட்டுப்போட்டவர் நீங்க.. நான் சசிகலாவால் முதல்வர் ஆனது உண்மை தான். அதே மாதிரி அம்மா இருக்கும் போதே சசிகலாவால் முதல்வரானவரும் நீங்க தான். உங்கள அம்மா கிட்ட கூட்டிகிட்டு போய் அறிமுகம் செய்தது யாரு? சசிகலா தானே? இல்லனு உங்களாள சொல்ல முடியமா?னு பதிலுக்கு கேட்க.. மண்டபத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டது.. உடனே இபிஎஸ் ஆதரவாளரான கோகுல இந்திரா எழுந்து .. இப்ப முதல்வரா அண்ணன் எடப்பாடி இருக்காரு. அவர மாத்திட்டு வேறு ஆள வேட்பாளராக்கினால் நம்ம ஆட்சி சரியில்லைனு சொல்ல மாட்டாங்களா? அதோட அண்ணன் எடப்பாடி முதல்வர் வேட்பாளர் வேண்டாம்னா, காரணத்த சொல்லுங்க என்று ஓபிஎஸ்சை பார்த்து கேட்டார். இதை இபிஎஸ் ஆட்கள் ஆமோதிப்பது போல் கூச்சலிட்டனர். உடனே திரும்பவும் ஓபிஎஸ் எழுந்து .. இப்பவும் சொல்றேன். நான் அம்மாவால முதல்வர் ஆனவன் தெரிஞ்சுக்கோங்க என்றார். உடனே ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் எழுந்து.. உயர்நிலை உறுப்பினர்கள் போட வேண்டும் என இருதரப்பும் இணையும் போது பேசப்பட்டது. இதுவரை எந்த முடிவும் எடுக்கல என்றதும், தேவையில்லாம பேசாதீங்க முதல்வர் யாருனு பிரச்சன போய்கிட்டு இருக்குனு ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கூற அவர்கள் அமர்ந்தனர். இப்படியாக இருதரப்பினரும் கையை காட்டி காட்டி பேசிக்கொண்டே போக, கே பி முனுசாமி எழுந்து .. இந்த விஷயத்த நீங்க 2 பேரும்  தான் பேசி முடிவு  எடுக்கணும்னு கூற.. ஓபிஎஸ் உடனே .. இதுல பேசி என்ன முடிவு எடுக்குறது. கட்சியும் தொண்டர்களும் தான் முடிவு எடுக்கணும். என்னுடைய நிலைப்பாட்டை சொல்லி விட்டேன் என்று கறாராக கூறியிருக்கிறார். எடப்பாடியும் .. பெருமான்மையான நிர்வாகிகள் எனக்கு ஆதரவு கொடுக்குறாங்க. இதுல எதுக்கு நான் அடுத்தவங்க கிட்ட பேசணும்னு சொல்ல .. சில நிமிடங்கள் அமைதியாக இருக்க.. உடனே முனுசாமி இருரையும் அறைக்குள் அழைத்து பேசினார். அப்போது இருவரும் 30ம் தேதி தனியாக பேச முடிவு செய்யப்பட்டது. பின்னர் 7ம் தேதி அன்று முதல்வர் யார் என்பதனை நாம் அறிவித்து விடலாம் என முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையிலேயே கேபி முனுசாமி நிருபர்களிடம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் மரியாதைக்குரிய துணை முதலமைச்சர் அவர்களும் மாண்புமிகு முதல்வர் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இணைந்து 7 ஆம் தேதி அறிவிப்பார்கள்  என்கிற ஒரு சிங்கிள் லைன் கூறி விட்டு பிரஸ் மீட்டை முடித்தார்.. இன்றைய ஓபிஎஸ்சின் பேச்சு ஒரு முடிவு எடுத்து விட்டது போலவே இருந்தாகவே நிர்வாகிகள் கூறுகின்றனர்.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.. 

LEAVE A REPLY