ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மானகசேரி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கமான உற்பத்தியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென எதிர்பாராதவிதமாக வெடி விபத்து நிகழ்ந்தது. வெடிமருந்துகள் அடுத்தடுத்து பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில், ஆலையின் கட்டட அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
இப்பயங்கர விபத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த நேரத்தில் ஆலைக்குள் பல தொழிலாளர்கள் பணியில் இருந்ததால், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அணையாமல் எரியும் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளிலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
