Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. ஸ்வீட் வழங்கி கொண்டாடிய பெண்கள்…

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்ததை கொண்டாடும் விதமாக கரூரில் குலவை சத்தமிட்டு மகிழ்ந்தும் பொதுமக்களுக்கு ஜிலேபி வழங்கி கொண்டாடிய பெண்கள். திமுக தேர்தல் வாக்குறுதியின் படி ரேஷன் கார்டு வைத்துள்ள இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்

என்ற வாக்குறுதியை இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட்டில் உறுதி செய்யப்பட்டதை, தொடர்ந்து கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில், 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வசுமதி பிரபு பெண்களுடன் ஊர்வலமாக சென்று ஒவ்வொரு வீடுகள், கடைகளில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இனிப்பான ஜிலேபி கொடுத்து கொண்டாடினார். அப்போது பெண்கள் வட்ட வடிவமாக கூடி நின்று குலவை சத்தமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!