அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி’ மற்றும் புகழ்பெற்ற ‘கேட்ஸ்’ (Cats) பிராட்வே நாடகத்தில் நடித்த பிரபல அமெரிக்க நடிகர் ஸ்டீவன் ஹேக் (68) அண்மையில் காலமானார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது இல்லத்தில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக நவம்பர் 19-ம் தேதி அவர் உயிரிழந்ததாக ‘இன்டராக்ட் தியேட்டர் கம்பெனி’ உறுதிப்படுத்தியுள்ளது. 1978-ல் வெளியான ‘கிரீஸ்’ திரைப்படம் மூலம் அறிமுகமான இவரது மறைவுக்குத் திரையுலகினரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஸ்டீவன் ஹேக் காலமானார்
